திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக வின் பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது, இதில் திமுக கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைக்கவை ஆதரித்து அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மதிமுகவின் தனித் தன்மையை பாதுகாத்துக் கொள்வதற்காக சொந்த சின்னத்தில் தான் நிற்போம் என்று முதல்வரிடம் பேசிவிட்டு முடிவு செய்தோம், ஏற்கனவே போட்டியிட்ட பம்பர சின்னம் கிடைக்காததால் தீப்பெட்டி சின்னத்தை பெற்று அதில் போட்டியிடுகிறோம், நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இருப்பதாக கூறிக் கொள்கின்றனர் உண்மையில் இந்தியா கூட்டணிக்கு தான் கன்னியாகுமரி முதல் இமயமலை வரை வெற்றி வாய்ப்பு உள்ளது,
இலங்கை அரசு ஒரு இனத்தை அழித்துவிட்டு அகங்காரத்தில் பேசிக் கொண்டிருக்கிறது, அன்றைய நெருக்கடியான சூழலில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வாக்கப்பட்டது, அப்போதே திமுக சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, இந்தியாவின் ஒரு பிடி மண்ணைக் கூட இலங்கைக்கு விட்டு தர மாட்டோம் நீதிமன்றம் மூலம் கச்சத்தீவை மீட்க முயற்சி எடுப்போம், என்று வைகோ தெரிவித்தார்.