திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் தொங்கு பால கட்டுமானப் பணிகளை சு. திருநாவுக்கரசர் எம்.பி. இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது ;-
கடந்த 8, 9 ஆண்டுகளாக தொடர்ந்து முடிக்கப்படாமல் இருந்த இந்த தொங்கு பால பணிகள் விரைவில் நிறைவடையும் நிலையில் இருக்கிறது.மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பினால் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான 66 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு இன்றைக்கு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் அதாவது டிசம்பர் பாதியில் பணிகள் முழுமையாக நிறைவடையும். இது எனது தேர்தல் வாக்குறுதியில் பிரதான வாக்குறுதியாக இடம் பெற்றது. இதனை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளித்த மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறிய முதலமைச்சர் இப்போது நிம்மதி இல்லை என்று கூறுகிறாரே என கேட்டதற்கு,ஒரு தலைவருக்கு கட்சி நிர்வாகிகளிடம் கெஞ்சுவதற்கும், கொஞ்சுவதற்கும், மிஞ்சுவதற்கும் அதிகாரம் இருக்கிறது.ஜெயலலிதா கட்சியினரை தூக்கிலா? தொங்கவிட்டார். அல்லது துப்பாக்கியால் சுட்டாரா?.நடவடிக்கை தான் எடுத்திருப்பார்.
அ.தி.மு.க.வில் இருந்து நான் தனியாக பிரிந்து கட்சி துவங்கிய போது என்னுடன் 8 எம்.எல்.ஏக்கள் உடன் வந்தார்கள்.அப்போது சட்டமன்றத்தில் அதிமுக( ஜெயலலிதா )அதிமுக( திருநாவுக்கரசர்) என பிரித்து இருக்கைகள் வழங்கப்பட்டன.அதே போன்று மெஜாரிட்டி எம்எல்ஏக்களின் அடிப்படையில் சட்டமன்ற தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பு கொடுத்து அவர்களைசெய்ய வேண்டும். இதில் சபாநாயகர் என்ன? நடவடிக்கை எடுக்கப் போகிறார் என எனக்கு தெரியாது. அவர்களின் கட்சி,அங்கீகாரம் சின்னம் தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டியது தேர்தல் கமிஷனும்,கோர்ட் மட்டும் தான். சட்டமன்றத்தில் இருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து உட்கார வைக்க வேண்டும்.தமிழக கவர்னர்ஆர்.என்.ரவி,திருக்குறள் கம்பராமாயணம் என தெரியாதவற்றையெல்லாம் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் இங்கு தமிழ் பாடம் நடத்த வரவில்லை. மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக இருந்து செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு கூடுதல் அதிகாரங்கள் இருக்கிறது. அதே நேரம் நியமிக்கப்படும் கவர்னருக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் தான் உண்டு. அதை விடுத்து மொழி பற்றி பேசுவது. இந்தி, சமஸ்கிருதத்தை ஆதரித்து பேசுவது அவருக்கும், ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார். திமுக அமைச்சர் ஐ பெரியசாமி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என கூறியுள்ளார் என கேட்டதற்கு,அவர் தனது தன்னம்பிக்கையின் அடிப்படையில் கட்சி வளர்ந்திருக்கிறது எனக் கூறி தனித்துப் போட்டியிட வேண்டும் என கூறியிருக்கிறார் இது முடிவல்ல. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனித்து போட்டியிடும் முடிவை எடுக்க மாட்டார். இந்தக் கூட்டணி தொடரும் என்றார்.பேட்டியின் போது திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்டரி ராஜ்குமார் பேட்ரிக் ராஜ்குமார்,மாநில துணைத்தலைவர் முன்னாள் மேயர் சுஜாதா, கவுன்சிலர்கள் ரெக்ஸ், சோபியா விமலா ராணி, வக்கீல் சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.