பேங்க் ஆப் இந்தியா மதுரை மண்டலம் சார்பாக பெண்கள் மேம்பாடு திட்டம் குறித்த வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி தெப்பக்குளம் பிஷப் பேப்பர் பள்ளி வளாக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இதில் மதுரை மண்டல மேலாளர் உன்னி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பேங்க் ஆஃப் இந்தியா செயல் இயக்குநர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் குழுவினருக்கு ஐந்து கோடிக்கணக்கான காசோலை மற்றும் மகளிர் கடன் உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேங்க் ஆஃப் இந்தியா செயல் இயக்குநர் கார்த்திகேயன் பேசுகையில்: பேங்க் ஆப் இந்தியா 118 வருடமாக தேசிய அளவில் 5132 கிளைகளை கொண்டுள்ளது 2023 – 2024 முதல் காலாண்டில் 1551 கோடி லாபம் பெற்றுள்ளோம் இரண்டாம் காலாண்டில் 1498 கோடி நிகர லாபம் பெற்றுள்ளோம்

இந்த வருடம் 13 லட்சம் கோடி இலக்கை நோக்கி நம் சென்று கொண்டுள்ளோம் அதற்காக 70 மேற்பட்ட திட்டங்களை வைத்துள்ளோம். பேங்க் ஆப் இந்தியா தனது ஐடி துறைக்கு 25 கோடி செலவு செய்துள்ளது தற்பொழுது பேங்க் ஆப் இந்தியா புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் 12 கோடிக்கு மேல் உள்ளனர் இவர்கள் அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கு செய்ய வேண்டும் இதன் மூலம் பண பரிவர்த்தனை முதலீடு போன்றவை சுலபமாக செய்யலாம் தற்பொழுது சென்னை தெற்கு மண்டலத்தில் 75 கோடியும் மதுரை மண்டலத்தில் 25 கோடியும் கடன் வழங்கி உள்ளோம் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *