திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் சிறார் நீதி ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் ) Child in Care and Protection Act 2015 இன் பிரிவு 107 – இன் படி சட்டத்தின் முன் முரண்படும் ( Juvenile in conflict with law ) இளம் சிறார்களை கண்காணிப்பதும் அவர்களது பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்பது பற்றி காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமை திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர கூடுதல் துணை ஆணையர் அவர்கள் முன்னிலையில் உதவி ஆணையர்கள் , அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் பங்கேற்றனர் . மேலும் இந்நிகழ்ச்சியில் நன்னடத்தை அலுவலர் ( மாவட்ட சட்ட உதவி மையம் ) , குழந்தைகள் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துக்கொண்டு இப்பிரிவில் உறுப்பினர்களாக குழந்தைகள் நலத்துறையில் அனுபவமுள்ள இரண்டு சமூக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர் . Juvenile Justice Act , 2015 – ல் உள்ள சட்ட சீர்த்திருத்தங்களை பற்றியும் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.