திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் தயாளனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருச்சி சென்னை பைபாஸ் சஞ்சீவிநகர் ஜங்சன் நாகநாதர் டீ கடை அருகில் தனிப்படை போலீஸாருடன் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த KA 09 C 7543 Ashok Leyland Dost மினி லாரியை நிறுத்தி விசாரணை செய்தபோது சோமசேகர் வயது 22, மனோஜ் 26 ஆகியோரை விசாரணை செய்து மேற்படி வாகனத்தை சோதனை செய்த போது முட்டை கோஸ் மற்றும் சில காய்கறி மூட்டைகளுக்கு இடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் சுமார் ஒரு டன் எடை கொண்டதும் அதன் மதிப்பு ரூ .30,50,000 / என தெரிய வந்தது . மேற்படி நபர்களை விசாரணை செய்ததில் திருச்சி காந்திமார்க்கெட்டை சேர்ந்த விஜயபாஸ்கர் மற்றும் முத்து ஆகியோர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் மைசூரை சேர்ந்த பவர்லால் என்பவர் அனுப்பியதின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை காய்கறி மூட்டைகளுக்கு இடையில் மறைத்து எடுத்த வந்ததாகவும் . மேற்படி பாஸ்கர் மற்றும் முத்து என்பவர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைபற்றியும் , குட்கா விற்பனை செய்த ரூ .3 லட்சம் பணத்தையும் கைபற்றி கோட்டை காவல் நிலைய குற்ற எண் .1035 / 2021 u / s 273 , 328 IPC & sec 77 சிறார் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் உ / இ பிரிவு 6 , 24 ( 1 ) சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் – ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இவர்கள் மீதான விசாரணையில் விஜயபாஸ்கர் வயது 50 என்பவர் தொடர்ந்து இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு பல இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி அவர்களது வாழ்க்கையை சீரழித்தது தெரியவரவே கோட்டை காந்தி காவல் ஆய்வாளர் பரிந்துரையின்பேரில் காவல் துணை ஆணையர் ( சட்டம் மற்றும் ஒழுங்கு ) சக்திவேல் பரிந்துரையின்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி விஜயபாஸ்கர் என்பவரை இன்று ( 22.10.21 ) ந்தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க ஆணையிட்டார்கள் . திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜயபாஸ்கர் என்பவருக்கு குண்டர் தடுப்பு சட்ட ஆணை சார்பு செய்யப்பட்டது . இதுபோன்ற அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்தார் .