தமிழக திமுக கழகத்தின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு

தமிழகம் முழுவதும் திமுகவினர் ஏழை எளியோவருக்கு நலத்திட்ட உதவிகள் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் அன்னதானங்கள். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு கபசுர குடிநீர், உணவு பொட்டலங்கள் மற்றும் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *