ஒன்றிய அரசின் வரிக் கொள்ளையை கண்டித்தும், பெட்ரோல் விலை ரூ. 50 கேஸ் விலை ரூ. 450! வழங்க கோரியும், அம்பானி அதானிகளுக்கு வழங்கும் பல இலட்சம் கோடி வரிச்சலுகையை ரத்து செய்யக்கோரியும், பெட்ரோல் டீசல் மூலம் வசூலித்த 26 இலட்சம் கோடி வரிப்பணத்தை திருப்பிக் வழங்க கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட துணைச்செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் செழியன், மாவட்ட பொருளாளர் சங்கர், மாநகர செயற்குழு உறுப்பினர் கார்க்கி, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கோவன், மாவட்ட செயலாளர் ஜீவா, பொருளாளர் சரவணன், தமிழ்தேச மக்கள் முன்னணி வழக்குறைஞர் கென்னடி, ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு நிறுவனர் சம்சூதின், சமூக நீதிப் பேரவை நிறுவனர் ரவிக்குமார், அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் மகேஸ்வரன், சைனி, தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சின்னத்திரை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், மக்கள் உரிமை கூட்டணி மாவட்ட செயலாளர் காசிம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி ஆகிய நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.