கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார்(சக்தி) பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி கடந்த 13-ஆம் தேதி அன்று மர்ம முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு நீதி கேட்டு நேற்றைய தினம் தனியார் பள்ளி முழுவதும் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப் பட்டது. இதனை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பாக தனியார் பள்ளிகள் அனைத்து இயங்காது என்று நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இயங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும் திருச்சி மாநகரில் 30-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் உள்ளன. இதில் கமலா நிகேதன், செயின்ட் ஜேம்ஸ், செல்லம்மாள் உட்பட 5 க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளது. பள்ளிகளின் சார்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தொலைபேசி வாயிலாகவும்,குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.