அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி அவர்களின் 56வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மெயின் கார்ட் கேட் அருகே உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான அருணாச்சல மன்ற கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில்

திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹபீப் ரகுமான், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி வழக்கறிஞர் திலீப் ஆகியோர் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடினர்.

அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது இந்த ரத்ததான முகாமில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இளைஞர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ரத்ததானம் வழங்கினர்.
