திருச்சி காவேரி மருத்துவமனை குடல் அறுவை சிகிச்சை துறையின் சார்பாக இன்று முதல் மூன்று தினங்கள் திருச்சி சங்கம் ஹோட்டலில் மேம்பட்ட லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்முறை பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமினை திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.
காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் மற்றும் இணை நிறுவனர் டாக்டர் டி. செங்குட்டுவன் வாழ்த்துரை வழங்கினார் அப்போது இது போன்ற பயிற்சிகள் நடத்துவதன் மூலம் சிறந்த மருத்துவ சேவையினை மக்களுக்கு வழங்க இயலும் எனக் கூறினார். கோர்ஸ் இயக்குனர் டாக்டர் எஸ்.வேல்முருகன் உரையாற்றுகையில் பங்குபெற்ற அனைவரும் அனுபவமிக்க நிபுணர்களால் மூன்று நாட்களுக்கு செயல் முறை சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த செயல்முறை முகாமில் நேரடி லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் அதிநவீன லேப்ராஸ்கோப்பி முறைகளை விளக்கி கூறப்படுகிறது.
மேலும் நேரடி அறுவை சிகிச்சை, காணொலி தொலைக்காட்சியின் மூலம் நடத்தப்பட்டு,பயிற்சி மையத்திற்கு ஒளிப்பரப்பப்பட்டது. துறை தலைவர் டாக்டர் வேல்முருகன் மூலம் லேப்ராஸ்கோப்பி குடல்இரைப்பை மற்றும் உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் தலைமையில் இந்த பாடத்திட்டம் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த பயிற்சி முகாம் இன்றைக்கு ஆறாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.