குவைத் நாட்டில் பணி இடத்தில் இறந்த முத்துக்குமரனின் உடல் , தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டது. நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர், அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முத்துக்குமரனின் உடலுக்கு மரியாதை செலுத்த பின்னர் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :

வேலை நிமித்தமாக முத்துக்குமரன் சென்று அங்கு உயிரிழந்து இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அயலக தமிழர்களுக்கான துறை இருக்கிறது – அங்கு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறைப்படி பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும் அதற்காகத்தான் இந்த துறையை உருவாக்கப்பட்டு இருக்கிறது – இதை பற்றி விழிப்புணர்வு வேண்டும். கடந்த ஆண்டில் 152 பேரும் – இந்த ஆண்டு 116 பேரும் உயிரிழந்துள்ளனர்.அதே போல் வெளிநாட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று கடந்த ஆண்டு 315 பேரும் இந்த ஆண்டு 311 பேரும் கோரிக்கை முன் வைத்திருந்தனர் அவர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம்.

இந்த துறையின் மூலமாக 181 பேரை குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாட்டிற்கு பணிக்காக அனுப்பி வைத்துள்ளோம் – இங்கிலாந்தில் இருந்து செவிலியர் பணிக்காக 500 பேர் கேட்கப்பட்டு இருக்கிறார்கள் – இதில் 481 பேர் பதிவு செய்து வேலைக்கு செல்ல தயாராக உள்ளனர்.

பல கிராமங்களில் உள்ள நிலங்கள் வஃபு வாரியத்திற்கு சொந்தம் என்கிற சர்ச்சை குறித்த கேள்விக்கு ? சர்வே எண் விடுபட்டு கிராமத்தில் பெயர் மட்டும் போடப்பட்டு இருப்பதால் பல இடங்களில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மீண்டும் மறு அளவீடு செய்வதற்கு வக்ஃப் வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறையாக பதிவு செய்துவிட்டு செல்வது மிக முக்கியமான ஒன்று இது குறித்த விழிப்புணர்வு நமக்கு கட்டாயம் தேவை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *