திருச்சி திருவானைக்கோவில் குளத்தில் தண்ணீர் திறப்பதற்காக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு இன்று காலை திருவானைகோவில் வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் காரில் ஏறச் சென்ற பொழுது அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது. திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் காலி மனையில் அப்பகுதியை சேர்ந்த நாங்கள் சிறிய வீடுகள் கட்டி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மனை வாடகை செலுத்தி குடி யிருந்து வருகிறோம். தமிழக அரசு 2001ஆம் ஆண்டு முதல் நியாயவாடகை சட்டத்தை சட்டசபையில் மூலம் நிர்ணயம் செய்து அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் என்று அறிவித்தார்கள். அதன்படி 2018ஆம் ஆண்டு வரை வாடகை பாக்கி இல்லாமல் செலுத்தி வருகிறோம். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் எங்களுக்கு பல மடங்கு வாடகை உயர்வு செய்தார்கள். ஆனால் நாங்கள் அன்றாட வேலை செய்ததால் தான் உணவு சாப்பிட முடியும் என்று வாழ்ந்து வருகிறோம். அதனால் எங்களுக்கு அதிகமாக உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து எங்களுக்கு குறைந்த வாடகை நிர்ணயம் செய்து எங்களுக்கு உதவுமாறு பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் எங்களுக்கு சொந்த வீடுகளோ, இடங்களோ எதுவும் கிடையாது இந்த கோயில் இடத்தைத்தான் நம்பி வாழ்ந்து வருகிறோம். மேலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் எங்களுக்கு இந்த இடத்தை பட்டா செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக கூறி அப்பகுதி மக்கள் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு அளித்தனர். இந்த மனுவை பொதுமக்கள் அளித்த போது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மாவட்ட ஆட்சியர் கலெக்டர் ஆகியோர் உடனிருந்தனர்.
Facebook
WhatsApp
Email
Messenger
Post navigation