கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை பரவல் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்தது. இதில் சாலை ஓரத்தில் இருப்பவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்ட மக்கள் ஒரு வேளை உணவிற்காக மிகவும் கஷ்டப்பட்டனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி குண்டூர் MIET கல்லூரி அருகே இன்று காலை மாற்றுத்திறனாளி ஒருவர் வெயிலில் மூன்று சக்கர மாற்றுத்திறனாளி வண்டியை சாலையில் ஒட்டி கொண்டு வந்தார். இதனை கண்ட நவல் பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் மாற்றுத்திறனாளிக்கு தண்ணீர் பாட்டில், உணவுப்பொட்டலம் கொடுத்து உபசரித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்