தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர், திருச்சி மாநகரத்தில் உள்ள கண்டோன்மெண்ட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல்நிலையங்களை பார்வையிட்டும், அங்கு வரவேற்பாளர்களின் (Receptionist) செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் குறைகளை கேட்டறிந்தும், பின் தக்க அறிவுரைகளை வழங்கினார்கள். அதன்பின்னர், திருச்சி மாநகர காவல் ஆணையகர கூட்ட அரங்கத்தில் நடந்த பாரி குற்ற வழக்குகளான (GCR) ஆதாய கொலை, கொலை, வழிப்பறி, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் POCSO வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கலந்துரயைாடினார். அவர்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் பேசுகையில், காவல்துறை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தான் உறுதுணையாக இருக்கும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள இழப்பீடு மற்றும் நிவாரண தொகைகள் பெற்று தரப்படும் என்றும், தங்களது குறைகளை காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்களை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம் என கூறினார்கள்.

அதன்பின்னர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்கள். தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக காவல்துறையை மேம்படுத்தும் விதமாக E-Beat App பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், திருச்சி மாநகரத்தில் ரோந்து செய்யும் காவல் ஆளிநர்கள் மேற்கண்ட செயலிலை பயன்படுத்துவது மூலமாக திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பங்களை உடனுக்குடன் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனவும், இச்செயலி குறித்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்கள். மேலும் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனவும், குற்றத்தடுப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், கஞ்சா மற்றும் போதை பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் எனவும், தமிழக முதலமைச்சரின் முதல்வரின் முகவரி மனுக்கள், பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் மனுக்களின் மீது தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கினார்கள்.

திருச்சி மாநகரில் இந்த வருடம் 2023 ஜனவரி மாதம் பதிவான திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளை விரைந்து கைது செய்தும், வழக்கின் சொத்துகளை மீட்டு மெச்சத்தகுந்த வகையில் சிறப்பாக பணியாற்றிய 3 ஆய்வாளர்கள், 1 உதவி ஆய்வாளர் மற்றும் 18 காவல் ஆளிநர்கள் உட்பட மொத்தம் 22 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். இக்கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர். சத்தியப்பிரியா, மற்றும் காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு தலைமையிடம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *