தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் தலைவர் பூரா.விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியது போல தமிழகமெங்கும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். உரத்திற்கு 5 சதவீதமும், பூச்சி கொல்லி மருந்திற்கு 18 சதவீதமும், நுண்ணூட்ட சத்து உரத்திர்க்கு 12 சதவீதமும் மத்திய மாநில அரசுகள் GST வரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிதியான கரும்புக்கு டன்னிற்கு ரூ.4000, நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 ம் வழங்க வேண்டும். மேலும் மத்திய மோடி அரசு விவசாயிகளுக்கு என தனி வேளாண் பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 19.01.2023 அன்று தமிழக எரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.