108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழா. நேற்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா துவங்கியது.பகல் பத்து முதல் நாள் திருவிழாவான இன்று விருச்சக லக்னத்தில் நம்பெருமாள் ரத்தின நீள்முடி கிரீடம், கபாய் சட்டை, ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை, காசு மாலை உள்ளிட்ட, அடுக்கு பதக்கங்களை சூடியபடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு

கோவிந்தா கோபாலா மந்திரம் முழங்க மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் அர்ஜுன மண்டபம் சென்றடைந்தார். முக்கிய நிகழ்ச்சியான வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழா வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி நடைபெறுகிறது. 7.15 முதல் 11.30 மணி வரை அர்ஜுன மண்டபத்தில் பொதுமக்கள் பெருமாளை தரிசனம் செய்யலாம் – பின்னர் 4 மணி முதல் 6 மணி வரை தரிசனம். இரவு 7 மணிக்கு அர்ஜுனா மண்டபத்தில் இருந்த புறப்பட்டு நம்பெருமாள் மீண்டும் மூலஸ்தானம் சென்றடைவார்.

வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் முதலாம் திருநாள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த மூன்று வருடங்களாக கொரோனா கட்டுப்பாடால் குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் கொரோனாவின் தளர்வுகள் முழுவதுமாக நீக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்