தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நேரத்தை இரண்டு மணி நேரம் கூடுதலாக நடத்திட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை சந்தித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின்,மற்றும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தலைமையில் மனு அளித்தனர்.முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜல்லிக்கட்டு காளைகளுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழரின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு பல்வேறு தடைகளை விதிக்கப்பட்டு தமிழகம் போராடி மீண்டும் கொண்டு வந்து சிறப்பாக நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு 8 மணி முதல் 2மணி வரை எனது தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக வெளியூரிலிருந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் அவைகளை அவிழ்த்து விடுவதிலும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
எனவே, உடனடியாக ஜல்லிக்கட்டு நேரத்தை 8 மணி முதல் 4:00 மணி வரை என இரண்டு மணி நேரம் உயர்த்தி வழங்க வேண்டும், ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்துவதை தடுத்திடும் வகையில் தள்ளுவாடி முறையை கைவிட்டு டோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்ப்பதை உறுதி செய்ய வேண்டும், மேலும் மாடுப்பிடி வீரர்களுக்கான டோக்கனுக்கு எந்த விதமான பணம் வசூலிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டனர்.