செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான பல்வேறு நவீன காது கேட்கும் கருவிகளை தயாரிக்கும் உலகின் முன்னனி நிறுவனங்களுள் ஒன்றான டபுள்யூ.எஸ்.ஆடியாலஜி நிறுவனம்  திருச்சியில் உள்ள அருண் காது கருவி நிறுவனத்துடன் இணைந்து திருச்சி, கன்டோன்மெண்ட், ஜென்னி பிளாசாவில் “ப்ரில்லியண்ட் சவுண்ட கேலக்ஸி” என்கிற புதிய மையத்தை இன்று திறந்துள்ளது. இந்த விழாவிற்கு வருகை தந்தவர்களை அருண் ஹியரிங் எய்ட் நிறுவனர் அருண்குமார் வரவேற்றார். டபுள்யூ.எஸ்.ஆடியாலஜி நிறுவனரும் முதன்மை செயல் அதிகாரியுமான அவினேஷ் பவார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய மையத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் செவித்திறன் குறைபாடுடைய சுமார் 100 பேருக்கு இலவசமாக காது கேட்பு கருவி வழங்கப்பட்டன.

இதுகுறித்து டபுள்யூ.எஸ்.ஏ நிறுவனர் அவினேஷ் பவார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், உலக அளவில் முன்னணி காதுகேட்பு கருவிகள் தயாரிக்கும் நிறுவனமான எங்கள் நிறுவனத்தின் மூலம்,வைட்எக்ஸ் மற்றும் சிக்னியா ஆகிய பிராண்டுகள் மூலம் காது கேட்பு கருவிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நவீன டெக்னாலஜி மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய காது கேட்பு கருவிகளை செவித்திறன் குறைபாடு உடையவர்கள் குறைந்த விலையில் வாங்கி பயனடைய முடியும். அந்த வகையில், திருச்சி ஜென்னி பிளாசாவில் துவங்கப்பட்டுள்ள எங்களது பிரில்லியன்ட் சவுண்ட் கேலக்ஸி மையம் ஒரு லைவ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் ஆகும். வழக்கமாக காதுகேட்பு கருவிகளை வாங்கிச் செல்லும் விற்பனை நிலையமாக இல்லாமல், இது செவித்திறன் குறைபாடு உடையவர்கள் அவர்களுக்கான குறைகளை நிவர்த்திசெய்யும் வகையில் உள்ள தற்போதைய நவீன தொழில் நுட்பகரணங்களை பார்த்து லைவ் எக்ஸ்பீரியன்ஸ் செய்து வாங்க முடியும். மேலும் இங்குள்ள நிபுணர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப தகுந்த கருவிகளை பரிந்துரைப்பார்கள். மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி பயனடைய முடியும். இந்தியாவில் சுமார் 11 இடங்களில் இது போன்ற லைவ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் இருந்தாலும்,

 

மத்திய தமிழகத்தில் திருச்சியிலேயே முதன் முதலாக அருண் ஹியரிங் எய்ட் நிறுவனத்தோடு இணைந்து எங்களது பிரில்லியன்ட் சவுண்ட் கேலக்ஸி மையத்தை துவங்கியுள்ளோம். இந்தியாவை பொருத்தவரை 6.5 மில்லியன் மக்கள் செவி திறனால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது, எனவே எங்களது நோக்கம் ஏழை எளிய மக்கள் பயன்பட வேண்டும் என்பதே. இதன் மூலம் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள செவித்திறன் குறைபாடு உடையவர்கள் பயனடைய முடியும் என தெரிவித்தார் . தஞ்சாவூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அருண் ஹேரிங் எய்ட்சென்டருக்கு ஏற்கனவே தமிழகத்தின் முழுவதும் சுமார் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் காதுகேட்ப கருவி விற்பனை மையங்கள் இயங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது டபிள்யூ.எஸ் ஆடியாலஜி நிறுவனத்துடன் இணைந்து பிரில்லியன்ட் சவுண்ட் கேலக்ஸி என்ற மையத்தை திருச்சியில் துவக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அருண் ஹியரிங் எய்ட் மற்றும் டபுள்யூ.எஸ். ஆடியாலஜி நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். டபிள்யூ.எஸ். ஆடியோலஜி மார்க்கெட்டிங் அதிகாரி மோகன் சுவாமி, விற்பனை இயக்குனர் கிஷலயா சக்கரவர்த்தி மற்றும் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்