தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை இன்று நடந்தது.
தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு நாளை 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.