தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் இதுவரை 32 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பாலும், 10 பேர் டெல்டா பிளஸ் வகை பாதிப்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *