தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் யாத்திரை திருச்சி புத்தூர் நால் ரோடு பகுதியில் நடைபெற்றது. யாத்திரை முடித்தபின் திருச்சி பாஜக அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்களை தமிழக பாஜக கட்சியில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இணைந்தனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்…. இரு தினங்களாக தமிழக முதல்வர் திருநெல்வேலியில் முகாமிட்டு பல்வேறு மருத்துவமனைகளை துவங்கி வைத்துள்ளார். அந்த மருத்துவமனையில் 60% பங்கு மத்திய அரசுக்கும் உள்ளது. அவர்கள் திறக்கும் போது மத்திய அரசின் அமைச்சர்களை அழைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நேற்று மேடையில் பேசிய முதல்வர் 100 நாட்கள் வேலை திட்டத்தை பற்றி பேசியுள்ளார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 150 நாள் வேலைத்தருவோம் என கூறினார்கள். ஆனால் இதுவரை அதை நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் சில குளறுபடி இருந்தது, சரியாக கணக்கு பார்க்காமல் உண்மையில் வேலைக்கு செல்பவர்களுக்கு பணம் கொடுக்காமல் இருந்ததால் இடையில் தடைபட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசு முடிவு எடுத்து 125 நாட்கள் வேலை கொடுப்போம் என உத்தரவு பெற்றுள்ளது. விவசாய மக்களின் கோரிக்கைகளை ஏற்று விவசாயம் தடைபடும் போது விவசாயிக்கு உறுதியாக 125 நாட்களுக்கு வேலை கொடுப்போம் என்ற உத்தரவாதத்தை மோடி தந்துள்ளார். ஆனால் அவர்கள் அதையும் குறை சொல்கிறார்கள். மகாத்மா காந்தியின் பெயரை அழிக்கிறார்கள் என முதல்வர் கூறியுள்ளார். உண்மையான மதச் சார்பின்மையை நீங்கள் கடைபிடிக்கின்றீர்களா என முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும்.

ஊடகங்கள் முதலமைச்சரை பார்த்து என் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை, கிறிஸ்மஸ் விழாவில் பேசுங்கள் வாழ்த்து சொல்லுங்கள் நாங்களும் வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம் ஆனால் அதே நேரத்தில் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் நீங்கள் ஒரு போலி மதச்சார்பின்மை என்கிற பெயரில் தவறான கொள்கையை கடைப்பிடித்துக் கொண்டிருந்தீர்கள் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் உங்களுக்கு மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்றார். 100 நாள் வேலை தருகிறோம் என்பது தானே தவிர பெயர் எந்த பெயர் வைத்திருந்தால் என்ன, தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்து நிலையங்களிலும் கலைஞர் பெயரை வைத்துள்ளனர் கலைஞர் என ஒரு இடத்தில் பெயர் வைத்தாலே போதுமே, கடலில் பேனா வைக்க வேண்டும் என்றார்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு இதை ஒரு குறையாக கூறுகிறீர்களே என்றார். காலம் முறை ஊதியம் வழங்காத தமிழக அரசை கண்டு கண்டித்து ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்துகிறது, தொழில் நிரந்தரம் செய்யாத துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ் ஐ ஆர் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களும் தமிழக முதலமைச்சரின் கீழ் இயங்குகின்றனர். அதை முறையாக செய்ய வேண்டியது தமிழக முதல்வரின் கடமை. விஜய் தூய சக்தியா என்பதை மக்கள் தான் கூற வேண்டும், அவர் வீட்டில் நடக்கும் விஷயங்கள் நமக்குத் தெரியாது. விஜயின் நோக்கம் திமுக இருக்கக் கூடாது என்பதுதான் அதனால்தான் அவர் தீய சக்தி என்கிறார். திமுக இருக்கக் கூடாது என சொல்லும் விஜய் எப்படி முடிவெடுக்க வேண்டும்.

தேர்தலில் இருமுனைப் போட்டி இருந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என நினைத்து அவர் செயல்பட்டால் நல்லது. திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிவது எங்களை பாதிக்காது நாங்கள் அதிமுக கூட்டணியில் 2021 ஆம் ஆண்டு நிறைய இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம் 35 இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். இன்று சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு பல்வேறு பிரச்சனைகள் பாலியல் வன்கொடுமைகள் கஞ்சா கடத்தல் கொள்ளை கொலை என தமிழகம் வேக மோசமான இடத்தில் உள்ளது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது, மகாராஷ்டிராவில் பிஜேபி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது, பிஹாரில் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இதே நிலைமைதான் தமிழகத்திலும் தொடரும். பீகாரில் வீசும் காற்று தமிழகத்திற்கு வந்து சேரும் என்றார். அகில இந்திய அளவில் 1657 எம்எல்ஏக்கள், 272 எம்பிக்கள் எங்களிடம் உள்ளனர் உலகிலேயே நாங்கள் மிகப்பெரிய கட்சி. நாங்கள் யாரையும் கூட்டணிக்கு வா என்று அழைக்க முடியாது வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்றார். தமிழகத்தில் குக் கிராமங்களில் கூட கஞ்சா பழக்கம் உள்ளது. பள்ளி மாணவர்கள் மது போதைக்கு அடிமையாக உள்ளனர்.

அமலாக்கத்துறை பரிந்துரையின் பெயரில் அமைச்சர் நேரு மீது தமிழக காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றார். நாடு முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது அதேபோல் திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லும் நீங்கள் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என கேட்டபோது…. அதனை கண்டுபிடித்து நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். நீதிபதி திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு கொடுத்த பின்பும் அதை ஏற்ற விடாமல் தடுத்தது காவல்துறை அப்பொழுது யார் பவர்ஃபுல்லாக இருக்கிறார்கள் என உங்களுக்கு தெரிகிறதா என்றார். சபரிமலை ஐயப்பன் கோயிலைப் பொறுத்தவரை அங்கு காலம் காலமாக இருக்கும் நடைமுறையை மாற்ற வேண்டாம் என்பதால் அதே நிலை தொடர்ந்தது என்றார். இந்தியாவில் அதிக தற்கொலை நடக்கும் மாநிலமும் நமது தமிழ்நாடு தான் என்றார். 2024ம் ஆண்டில் 208 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் சேர்க்கை கூட நடைபெறவில்லை. திமுகவிற்கும் தவெகாவிற்கும் தான் போட்டி என விஜய் கூறுகிறாரே என கேட்டபோது…. நான் சொலாகிறேன் நாங்கள் தான் ஆட்சியே அமைப்போம் என்றார்.
