தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, கன்னியாகுமரி, வேலூர் ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சமச்சீரற்ற தன்மையை நீக்க தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நாட்டின் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை காணொலி மூலம் கலந்துரையாடினார். தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, கன்னியாகுமரி, வேலூர் ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். நாட்டின் எந்த பகுதியும் வளர்ச்சி பாதையில் இருந்து விலகி விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பிரதமரின் தொலை நோக்கினால் இந்த முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. மாவட்ட அளவில் பல்வேறு திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதை இந்த கலந்துரையாடல் நோக்கமாக கொண்டிருந்தது. இந்த ஆலோசனையின் போது மாவட்டங்களில் அரசு திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடி நேரடியாக கருத்துக்களை கேட்டறிந்தார். மாவட்டங்களில் உள்ள பல்வேறு துறைகளின் பல்வேறு திட்டங்களை வேகமாக செயல்படுத்துவதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.