திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபம் கூட்டரங்கில் இன்று நடந்தது இந்த கூட்டத்திற்கு குழுவின் தலைவர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் வளர்ச்சி முகமை , வேளாண்மைத்துறை , மாவட்ட சுகாதாரத்துறை , தோட்டக்கலைத்துறை , மாநகராட்சி , நகராட்சிகள் , பேரூராட்சிகள் , அனைவருக்கும் கல்வி இயக்கம் , குடிநீர் வடிகால் வாரியம் , மின்சார வாரியம் , இரயில்வே , நெடுஞ்சாலைத்துறை , அஞ்சல் துறை , தொலைத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் , செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டத்தின் கீழ் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் , தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம் , ஜல்ஜீவன் திட்டம் , தூய்மை பாரத இயக்கம் , பிரதமந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா , உட்கட்டமைப்பு வசதிகள் , பிரதம மந்திரி அவாஸ்யோஜனா , அழகிய நகரமயமாக்கல் பணி , பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட செயலாக்கங்கள் குறித்து , கண்காணிப்புக் குழுவின் தலைவரான திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்து , திட்டப்பணிகளை தரமாகவும் விரைந்து செயல்படுத்தியும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென்று தெரிவித்தார் . ஊராக இந்நிகழ்வில் , மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, திருச்சி ( கிழக்கு ) சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் , மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை , உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,
திருச்சியில் முடிக்கப்படாமல் உள்ள அரிஸ்டோ மேம்பால பணிக்காக பாதுகாப்பு துறைக்கு நிலம் ஒதுக்கும் பணிகள் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டது.விரைவில் பணி தொடங்கும் பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகர்.அவரின் தனிப்பட்ட கருத்தை அவர் கூறுகிறார். ராகுல் காந்திக்கு மோடியின் பலமும் தெரியும், பலவீனமும் தெரியும்.அகில இந்திய அளவில் மோடியை சமாளிக்க கூடிய,மோடியை வெற்றி பெறக்கூடிய ஒரே தலைவராக ராகுல் காந்தி தான் இருக்கிறார்.அதை காலம் விரைவில் நிரூபிக்கும்.புதிதாக யாரிடமும் சென்று பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ராகுல் காந்திக்கு இல்லை. அரசியல் சட்டத்தின் படி ஆளுநர்களுக்கு சில எல்லைகள் உண்டு.அதன்படி செயல்படுவது தான் சரியானது.கடந்த காலங்களில் ஆளுநர்கள் அவ்வாறு தான் செயல்பட்டார்கள்.ஆனால்மோடி அரசு வந்த பின்பு ஆளுநர்களை பயன்படுத்தி மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு சில தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு புதிதாக வந்துள்ள ஆளுநர் தன் எல்லைகளை உணர்ந்து செயல்படுவார் என எதுர்பார்க்கிறோம் அப்படி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அப்படி செயல்பட்டால் தான் அவருக்கும் நல்லது. ஏழு பேர் விடுதலை அரசியல் சட்டத்தின்படி நடக்கட்டும் அதை தான் காங்கிரஸ் கூறுகிறது என்றார்.