தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் சார்பில் கேக் வெட்டி, இரத்ததானம் வழங்கியும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் மேற்கு தொகுதி சார்பாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வது வார்டு பீம நகர் கூனி பஜார் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஜாபர் அலி ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் செந்தில் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்வில் பீமநகர் பகுதி செயலாளர் மதன்ராஜ் துணைச் செயலாளர்கள் ரோபோ வேலு, ஷெகனாஜ், வட்ட செயலாளர்கள் செந்தில், வினோத் மற்றும் நிர்வாகிகள் , சுதாகர், முத்துக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
