தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் தொடர் கடன் வழங்கும் விழாவானது ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பாக மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்பு கடன் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி கிளை சார்பாக இரண்டு தொழில் முனைவோருக்கு 40.14லட்சத்திற்கான காசோலை மேலும் 9 தொழில் முனைவோர்கள் வழங்கி36.21 கோடி ரூபாய் மதிப்பிலான விண்ணப்பங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி மண்டல மேலாளர் மோகன் கடன் வழங்குவதற்கான அனுமதியை வழங்கினார்.
இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டமான ஒரு ட்ரில்லியன் டாலராக 2030ம் ஆண்டிற்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான முயற்சியில் தற்போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு எடுக்கப்பட்டவரும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கூட்டத்தின் நோக்கமே தமிழகத்தின் வான்வழி மற்றும் பாதுகாப்பு தொழில்துறையில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதுடன் ஏற்கனவே இயங்கி வரும் சிறு மற்றும் குரு தொழில் நிறுவனங்களுக்கும் பணியாளர்களின் செயல் திறனை மேம்படுத்தவும் இந்த கூட்டத்தில் வாயிலாக விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் துணை பொது மேலாளர் பழனிவேல், DIC பொது மேலாளர் பிரபு ஜெயக்குமார் சிப்காட் நிறுவனத்தின் உதவி பொறியாளர் பாலமுரளி, உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த சிறு மற்றும் குரு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.