ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77 வது நினைவு நாள் மற்றும் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பேம்செப் 17-வது மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு தேசிய தலைவர் மகன் சசானே தலைமை தாங்கினார்.
மாநிலத் தலைவர் சேட்டு முன்னுரை வாசித்தார். மாநாட்டை பேம்செப் மூத்த தலைவர் முருகையன் துவக்கி வைத்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய தலைவர் வாமன் மேஸ்ராம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த மாநில மாநாட்டின் விவாத பொருளாக அனைத்து பகுஜன் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மத சிறுபான்மையினர் ஒருங்கிணைந்து போராடாமல் கட்டமைப்பிலிருந்து விடுதலை சாத்தியமில்லை, அல்லது இந்து முஸ்லிம் மதக்கலவரங்களை உருவாக்கியவர்களால் நாட்டினுடைய ஒற்றுமை உடைக்கப்படுகிறது என்பது குறித்த விவாதமும்
அதேபோல் நான் பயங்கரமாக கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தின் இந்த சூழ்நிலை வரை கொண்டு வந்துள்ளேன் அதை என் சமூக மக்கள் முன்னோக்கி எடுத்து செல்லாவிட்டாலும் பின்னோக்கி தள்ளி விடாதீர்கள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கார் அல்லது படித்தவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. இறுதியாக மாநில பொறுப்பாளர் விக்கி சவுத்ரி நன்றி உரையாற்றினார்.