திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்க துவக்க விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட பொருளாளர் தர்மர் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர் மஞ்சுநாதன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டோமினிக் ராஜ்குமார் துணைத் தலைவர்கள் யுவனராஜ், மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கௌரவ தலைவர்கள் ராஜா, சுப்பிரமணியன், மனோகர் உள்ளிட்ட துணைத்தலைவர்கள் துணைச் செயலாளர் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக விழாவில் அனைத்து சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையில் திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தின் லோகோ வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட தலைவர் மஞ்சுநாதன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளிக்கையில் கூறியதாவது;-

திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கத்தின் துவக்க விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது இவ்விழாவில் டீலர்ஸ் பைனான்சியர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த நல சங்கத்தின் நோக்கமாக கஷ்டத்தில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு பைனான்ஸ் உதவி ஏற்படுத்தி தருவது வேலையில்லாத நேரத்தில் வேலைக்கான ஏற்பாட்டை செய்து தருவது, முக்கிய நிறுவனங்களிடம் நேரடியாக பேசி குறைந்த விலையில் கஷ்டப்படும் சங்க உறுப்பினர்களுக்கு வண்டிகளை வாங்கித் தருவது உள்ளிட்ட இன்னும் ஏராளமான சேவைகளை நல சங்க உறுப்பினர்களுக்காக செய்ய உள்ளோம்.

அதேபோல் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அந்த கோரிக்கை திருச்சி மாவட்டத்தில் தற்போது எல்என்டி பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணிகளுக்காக வெளி மாநில வெளி மாவட்ட வண்டிகளை அழைத்து வந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் திருச்சி மாவட்டத்தில் 600 க்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர் குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு வண்டியை இயக்க நாங்கள் 1300 விலை நிர்ணயித்துள்ளோம் ஆனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வண்டிகள் 900 850 என குறைத்து பணம் வாங்கிக் கொள்வதால், எங்கள் தொழில் பாதிப்படைந்து மிகவும் கஷ்டமடைந்து வருகிறோம் எனவே தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு தீர்வு காண கோரி கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *