கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை திருச்சி பிரபாத் ரவுண்டானா முதல் மரக்கடை வரை சாலை ஓரத்தில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை திருச்சி மாநகர உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் கேட்பாரற்று கிடந்த ஒன்பது கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் அனைத்தும் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும் காரின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கார்களை எடுத்துச் செல்லலாம் அப்படி உரிய ஆவணங்கள் இல்லாத கார்களை ஒருமாத காலத்திற்குப் பின்பு பொதுஏலம் விடப்படும் என போலீசார் தெரிவித்தனர். பரபரப்பான பழைய மதுரை ரோடு சாலையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் அதிரடியாக திடீர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.