சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை பறைசாற்றும் வகையில் சென்னை குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் ஊர்வலமாக மக்களின் பார்வைக்காக எடுத்துச் செல்லப்பட்டது வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலையில் மக்களின் பார்வைக்காக நேற்றும் இன்றும் 2நாள் வைக்கப்பட்டுள்ளது. இன்று இரண்டாவது நாள் கலைக்காவிரி கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதில்ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பாக திருச்சி திட்டம் 1 மற்றும் திட்டம் 2 உள்ள குழந்தைகள் அலங்கார ஊர்திகளை பார்வையிட்டர். இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா, ரேவதி, மற்றும் சட்ட குழந்தைகள் மைய பணியாளர்கள் வந்திருந்தனர்.
மேலும் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு தங்களது கைபேசியில் அலங்கார ஊர்திகள் முன்பாக நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்க உரை வழங்கப்பட்டது. முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் உள்ளிட்டோர் அலங்கார உறுதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளரிடம் கூறுகையில்…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து எந்தவித புகாரும் வரவில்லை. நட்சத்திர பேச்சாளர்களுக்கு மட்டும் உள்ளரங்கில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இன்று வரை உரிய ஆவணம் இன்றி எவ்வித பணம் மற்றும் பொருள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை. திருச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என தெரிவித்தார்.