திருச்சி மாவட்டத்தில் இன்று 11-ம் தேதி விடியற்காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்களும் பொது மக்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற காலங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மின்கம்பிகள் அருந்து சாலை விழும் வாய்ப்பு உள்ளது அதனால் சிறுவர்கள் பெரியவர்கள் பாதுகாப்புடன், கவனமுடன் சாலை கடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இது போன்ற நேரத்தில் மின்னலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் எனவே திறந்த வெளியிலும் விவசாய நிலங்களிலும் விவசாயிகள் வெளியே செல்லாமல் வீட்டில் பாதுகாப்புடன் இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய திருச்சி மாவட்டத்தில் மழையின் அளவு அதிகமாக இருப்பதின் காரணத்தினால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. சிறார்களும் மாணவர்களும் அதில் இறங்க வேண்டாம் எனவும் பெற்றோர்கள் கவனமுடன் பார்த்துக் கொள்ளும்படியும், நீர்நிலைகளில் இறங்கி எந்த ஒரு விபத்தும் ஏற்படாத வண்ணம் நாம் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற மழைக்காலங்களில் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என தான் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியுள்ளார்.