தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ இரண்டு நாள் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள பயிற்சி அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி அலுவலர் விமலா செய்திருந்தார். மேலும் இந்த டேக்வாண்டோ போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறுமா மாணவர்கள் அடுத்த கட்ட நகர்வாக மாநில அளவில் நடைபெறும் டேக்வாண்டோ போட்டிகளில் பங்கு பெறுவார்கள் என தெரிவித்தார்.
