திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா.லெனின் தலைமை தாங்கினார் மாநில இணை செயலாளர் செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் சேதுபதி நன்றி உரை கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

ஒன்றிய அரசு எஸ்.எஸ்.சி தேர்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளனர் ஆனால் அதனுடைய கேள்வித்தாள்கள் இந்தி, இங்கிலீஷில் மட்டும்தான் உள்ளது, மருத்துவ எய்ம்ஸ், போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் தமிழில் கேள்வித்தாள்கள் இருக்கும்போது இந்த எஸ்.எஸ்.சி தேர்வு மட்டும் தமிழில் நடத்தாமல் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது, மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு ஜனாதிபதியை சந்தித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த அறிக்கை குறித்து இதுவரை எந்த வெளிப்படை தன்மையும் இல்லை ஆனால் பத்திரிக்கை செய்தி ஒன்றின் தகவலில் இனிவரும் காலத்தில் ஐஐடி, எய்ம்ஸ் உள்ளிட்ட தொழிற்கல்வி நிலையங்கள் எல்லாவற்றிலும் இந்தி மொழியில் தான் பயிற்சி அளிக்க முடியும், அதேபோல் எல்லா தேர்வுகளும் இந்தி மொழியில் தான் நடத்தப்படும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது, ஏற்கனவே ஒன்றிய அரசு நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் இந்தியில் தான் பேச வேண்டும், அறிக்கைகள் இந்தியில் தான் அனுப்பப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றனர், இது இந்தியா முழுவதும் இந்தியை திணிக்க கூடிய ஒரு முயற்சியாக கருதப்படுகிறது எனவே இதனை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில குழு சார்பாக தமிழகம் முழுவதும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *