பெண்கள் சமூகத்திற்கு செய்துவரும் சேவை மற்றும் அர்ப்பணிப்பு இன்றியமையாத தேவைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு வருடம் தோறும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உலக பெண்கள் தின கொண்டாட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு.
உலக பெண்கள் தினத்தையொட்டி திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் வனிதா மற்றும் பெண் மருத்துவர்களுக்கு திருச்சி மாவட்ட பிஜேபி பெண் நிர்வாகிகள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி புரியும் ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இரவு, பகலாக வீட்டையும், நாட்டையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பெண் காவலர்களுக்கு கிரீடம் அணிவித்து பெண்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோர் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி பெண்கள் தினத்தை கொண்டாடினர்.
உலக பெண்கள் தினத்தையொட்டி பெண் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பெண்கள் தினத்தைக் கொண்டாடிய பல் மருத்துவர்கள்.
ஏரோஸ் கேட்டோபால் விளையாட்டு வீராங்கனைகள் கேக் வெட்டி பெண்கள் தினத்தை கொண்டாடினர்.
திருச்சி அந்தநல்லூர் அச்சம்பட்டி கிராமத்தில் சமூக களப் பணிகளை செய்துவரும் பெண்களுக்கு பொன்னாடை போர்த்தி பெண்கள் தினம் வாழ்த்துக்கள் தெரிவித்த பள்ளி ஆசிரியர்கள்.
பெண்களின் தனித்தன்மை மற்றும் சிறப்பு, அவர்களுடைய தைரியம், தன்னம்பிக்கை உள்ளிட்டவற்றை நினைவுகூரும் விதமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் “தமிழ் முழக்கம்” சார்பில் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.