பாரம்பரிய இனிப்பு வகைகளிலிருந்து இன்றைய காலகட்டத்தில் புதிதாக ட்ரெண்டிங்கில் உள்ள ஸ்வீட்ஸ்கள் வரை கிடைக்கும் சிறந்த இடம் பி.ஜி நாயுடு என்கிற பெயரையும் நன்மதிப்பையும் பிஜி நாயுடு தொடர்ந்து பெற்று வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களின் ஏக மனதனான ஆதரவோடு பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் மூன்று புதிய கிளைகளை இன்று திருச்சி மாநகரில் திறந்துள்ளது. திருச்சி தினத்தந்தி அலுவலகம் எதிரில் 53 வது கிளையையும், குண்டூர் மொரைய்ஸ் சிட்டி நுழைவில் 54வது ஷோரூமையும், சத்திரம் பேருந்து நிலையம் மெஜஸ்டிக் மகாராஜா முன்பாக தனது 55 ஆவது சோறுமையும் இன்று பிஜி நாயுடு குழுமம் தொடங்கியுள்ளது.

திருச்சி மண்டல வர்த்தக பிரிவு மேலாளர் வெங்கட்ராகவன் கலந்து கொண்டு புதிய பி.ஜி நாயுடு ஷோ ரூம்களை திறந்து வைத்தார். இதில் திருச்சி மேலாளர் பிள்ளைகனி மற்றும் பலர் கலந்து கொண்டு குத்து விளக்கை ஏற்றினர். இத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மேலாண்மை இயக்குனர்கள் பாலாஜி,நிர்வாக இயக்குனர் அமர்நாத்,நிர்வாக இயக்குனர்கள் சார்நாத்,வினோத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த திறப்பு விழாவிற்கு தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, தமிழ்நாடு பத்திரிக்கை ஊடக பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், பசும்பொன் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவருமான அல்லூர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பி.ஜி நாயுடு ஸ்வீட்ஸ் திருச்சி புதுக்கோட்டை தஞ்சாவூர் பெரம்பலூர் காரைக்குடி பட்டுக்கோட்டை மதுரை ஆகிய ஊர்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் ஸ்வீட் மற்றும் காரம் உள்ளிட்ட பலகாரங்களை வழங்கி வருகிறது – தரமான நியாயமான விலையில் இங்கு 650 வகையான ஸ்வீட்டுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கார வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
