தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கும் கற்றல் இடைநீற்றலை தவிர்ப்பதற்கும் வகையில் தமிழக அரசால் முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைத்தார்.
முதல்வரின் காலை உணவு திட்டம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கூடுதல் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதன்படி திருச்சி எடமலைபட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 850 மாணவ மாணவிகளுக்கு இன்று காலை முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கவுன்சிலர் முத்து செல்வம் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி அவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். அருகில் பள்ளி முதல்வர் புஷ்பலதா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.