திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாத்தனூர் கிரமாத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சூப்பர் நடேசன் இவர் அதிமுக தெற்கு மாவட்ட லால்குடி ஒன்றிய செயலாளராக தற்போது 4 முறையாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி விக்னேஷ் என்பவரின் தலைமையில் நேற்று இரவு 5-க்கும் மேற்பட்டோர் அதிமுக ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசனை தாக்கியும், அவரது நான்கு சக்கர வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
அதிமுக நிர்வாகி தாக்கியதில் பலத்த உல் காயமடைந்த லால்குடி ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன் மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஒன்றிய செயலாளரை தாக்கி அதிமுக நிர்வாகி விக்னேஷ் முன்னாள் எம்பி குமாரின் ஆதரவாளர் என கூறப்படுகிறது