திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரும், கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று உறையூர் மேட்டுத் தெரு, பாண்டமங்கலம் தெற்குத் தெரு, வெள்ளாளர் தெரு, நாச்சியார் கோவில் தெரு, பங்காளி தெரு பாளையம் பஜார், உறையூர் கடைத்தெரு, வாலாஜா ரோடு, பெரிய செட்டி தெரு, மற்றும் சி.எஸ்.ஐ காலனி ஆகிய பகுதிகளில் அமைச்சர் நேரு பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் வேட்பாளர் கே.என்.நேருவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் வேட்பாளருக்கு பொன்னாடை போர்த்தியும், கைகுலுக்கியும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் அவரை கண்டதும் உற்சாகத்தில் கைகளை அசைத்துத் தங்களது வரவேற்பைத் தெரிவித்தனர். குழந்தைகளின் இந்த அன்பான வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்த வேட்பாளர் நேரு, அவர்களுடன் புன்னகையோடு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். மேலும் வேட்பாளர் செல்லும் வீதிகள் எங்கும் தொண்டர்களின் முழக்கங்களாலும், பொதுமக்களின் உற்சாகத்தாலும் திருச்சி உறையூர் பகுதி திருவிழாவாக காணப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் போது மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், பகுதிச் செயலாளர் இளங்கோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *