திருச்சி பெரிய மிளகு பாறை காமராஜ் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பாரத பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் ராமதாஸ் அந்த படத்தை உடைத்த போது இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி படத்தை சாக்கடையில் வீசியதாகவும். பாஜக கண்டோன்மெண்ட் மண்டல் தலைவரை தாக்கியதாகவும், கவுன்சிலர் ராமதாசை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கவுன்சிலர் கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக பாஜகவினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசார் பாஜகவினரை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு மற்றும் வாக்கும் வாதம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முற்பட்ட போது காவல்துறையினர் மற்றும் பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கைது செய்ய மறுத்த பாஜகவினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.