தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் திருச்சி 30 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட வி எம் பேட்டை மாரியம்மன் கோவில், துர்க்கை அம்மன் கோவில், ஜெயில் பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு, அம்பர்ஷ பள்ளி வாசல், ஜெயில் தெரு, பேலஸ் தியேட்டர் மற்றும் ஸ்டார் தியேட்டர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர் பெருமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். அருகில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *