திருச்சி விமானநிலையத்தை அடுத்துள்ள குண்டூரில் வடக்கு மற்றும் கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்குச் சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பேராசிரியர் முனைவர் நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றினார். இவ் விழாவில் பொங்கலைப் போற்றுவோம் என்னும் தலைப்பில் கப்பல் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி கவிதை பாடினார். தன்னம்பிக்கை கொள்வோம் என்னும் தலைப்பில் டாக்டர் கலைமணி உரையாற்றினார். சூழலியல் காப்போம் என்னும் தலைப்பில் தண்ணீர் அமைப்பின் தலைவர் நீலமேகம் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

உடல் நலம் காப்போம் என்னும் என்னும் தலைப்பில் டாக்டர் ஆ.விக்காஷ், பல் மருத்துவர் ஆலோசனை உரை வழங்கினார். விழாவில் “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம் ” என்ற விழிப்புணர்வு நிகழ்வு நடைப்பெற்றது. இப் பொங்கல் விழாவில் திருச்சி புத்தூர் படையப்பா கலைக் குழுவின் தலைவர் இராமசந்திரன் தலைமையில் தப்பாட்டம், பறையாட்டம் நடைபெற்றது. ஜோதிவேல் சிலம்பக் கூடத்தின் ஆசான் சக்திவேல் தலைமையில் சிலம்பாட்டம் மான்கொம்பு சண்டை, சுருள் வீச்சு போன்ற தமிழர்களின் பாரம்பரியமான வீரவிளையாட்டுகள் நிகழ்த்திக் காட்டப்பட்டன.

இவ் விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருமதி செ.சவரியம்மாள் செல்வராஜ், திருவெறும்பூர் ஒன்றியக் குழு உறுப்பினர் சு. பாலமுருகன், குண்டூர் ஊராட்சி மன்ற 1ஆவது வார்டு உறுப்பினர் அய்யனார், குண்டூர் சமூக நல ஆர்வலர்.சி.பி.இராஜேஸ்வரன், திருவளர்ச்சிப்பட்டி PKR புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் பொ.மாரிமுத்து (எ)குமார் மற்றும் குண்டூர் ஊராட்சியின் மேனாள் உறுப்பினர் மற்றும் தொழில்அதிபர் பா.சுதாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழா இறுதியில் சங்கத்தின் பொருளாளர் கா.நடராசன் நன்றியுரை ஆற்றினார்.

குண்டூர் வடக்கு மற்றும் கிழக்கு கிராம கடியிருப்போர் நலச் சங்கத்தின் குடும்ப உறுப்பினர் சுமார் 250 பேர் இவ் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் அறுசுவை விருந்து உபசரிப்பு நடைபெற்றது. பொங்கல் விழா குழு உறுப்பினர்கள் டேவிட், சங்கரலிங்கம், புகழேந்தி, ஜே.எம். நகர் பிரபாகரன், பாலன் நகர் இராஜேந்திரன் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் சங்கத்தின் சார்பில் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்