திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் பொதுமக்கள் வருகிற தீபாவளி பண்டிகையில் பாதுகாப்புடன் வெடி வெடிப்பது குறித்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் அனுசியா தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன். நிலைய அலுவலர் மில்கிராஜா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு, தீ விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்வது எப்படி,
சமையல் கேஸ் சிலிண்டரில் தீப்பற்றினால் எப்படி தீயை அணைப்பது என்றும், எண்ணெய், பெட்ரோல் ஆகியவற்றில் தீப்பிடித்தால் ஈர சாக்கு கொண்டு எப்படி தீயை அணைக்க வேண்டும், என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் டேனியல் ஜெபராஜ், ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் பிரதீபா, நிர்வாக தலைவர் நெல்சன்ஜேசுதாஸ், ரோட்டரி கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன், துணை ஆளுநர் நந்தா செந்தில்,
மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளை ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அலுவலர் சுபாபிரபு மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டிருந்தனர்.