
திருச்சி சிந்தாமணி பகுதி தமிழக வெற்றிக்கழகம் சார்பாக தேசிய தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 119 ஆவது குருபூஜை விழா மற்றும் ஏழாம் ஆண்டு அன்னதான விழாவை தமிழக வெற்றிக்கழக திருவெறும்பூர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நாவல்பட்டு விஜி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி 15 வது வார்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி ஹாரிஸ் என்பவர் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தின் திருவெறும்பூர் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான நவல்பட்டு விஜி முன்னிலையில் தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

மேலும் அவரது காரில் திமுக கட்சி கொடி அகற்றப்பட்டு தமிழக வெற்றி கழகத்தின் கொடியை எம்எல்ஏ நவல்பட்டு விஜி அணிவித்தார். அருகில் திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் தர்கா சௌகத் மற்றும் மலைக்கோட்டை கிழக்குப் பகுதி செயலாளர் கணேஷ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

