திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் – திருச்சி கிழக்கு – மணப்பாறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு என்னும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 03/05/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கீழ்க்கண்ட விவரப்படி நடைபெற உள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட ஓட்டு எண்ணும் முகவர்கள் கூட்டம் காலை 7.00 மணிக்கு – திருவெறும்பூர் தொகுதி காட்டூர் தேர்தல் அலுவலகம், காலை 9.00 -திருச்சி கிழக்கு தொகுதி – மாவட்ட அலுவலகம், காலை – 11.00 மணிக்கு மணப்பாறை தொகுதி – மதுரை ரோடு தேர்தல் அலுவலகம்,

இக்கூட்டத்தில் மாநில,மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், வாக்கு என்னும் முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
