திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே பனையபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023 திட்டத்தில் உன்னத் பாரத் அபியான் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் முனைவர் பரமகுரு வழிக்காட்டுதலின் படி பனையபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது.

அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள பனையபுரம் ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உணவு பாதுகாப்பை உறுதி செய்திடவும் நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023 திட்டத்தில் உன்னத் பாரத் அபியான் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பழவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜெயவள்ளி வரவேற்புரை ஆற்றினார். பழவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் அருள் மொழியான் நஞ்சில்லா இயற்கை வேளாண்மை குறித்து பொதுமக்கள் விவசாயிகளுக்கு விரிவாக சிறப்புரையாற்றினார்.

பழவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜெயவள்ளி,பூச்சியில் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஷீபா ஜாய்ஸ் ரோஸ்லின் வேளாண்மை தொழில்நுட்பம் குறித்து உரையாற்றினார் இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் விவசாயிகளுக்கு உயிர் ஊட்ட இடுபொருள்களை வழங்கினார். இந்நிகழ்வில் பனையபுரம் தோட்டக்கலை உதவி அலுவலர் சதீஸ் பனையபுரம் ஊராட்சி கிராம பொதுமக்கள், விவசாயிகள்,மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *