திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏவும் ,திமுக வேட்பாளருமான கதிரவன் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் . இந்நிலையில் இன்று மேலஸ்ரீதேவி மங்கலம், சமயபுரம் சாலை ,புது காலனி ,துறையூர் எதுமலை சாலைகள் சந்திப்பு ,அத்தாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட கதிரவனுக்கு அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் கதிரவன் பேசுகையில் :- இதே உற்சாகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று, “உதயசூரியன்” சின்னத்தில் உள்ள முதல் எண் பட்டனை அழுத்தி தன்னை பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் . 100 சதவீதத்தில் குறைந்தது 98 சதவீத வாக்குகள் தமக்காக பதிவாக வேண்டும் .

திமுக அரசு மக்கள் நலத்திட்டங்களுக்காக ஏற்கனவே கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், பகுதி வளர்ச்சிக்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக குடிநீர் குழாய் இணைப்பு, கான்கிரீட் சாலை அமைத்தல், நீர்விநியோகம் மேம்படுத்தல் போன்ற அடிப்படை வசதிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் என்றார். அத்துடன், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளதாகவும், மக்கள் தேவைகளை அறிந்து கட்டாயம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் .மக்கள் அளிக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்த அவர், “உதயசூரியன்” சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு மீண்டும் கேட்டுக்கொண்டார்.
