தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் முழு உருவ சிலைக்கு இன்று பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெரியார் பிறந்த நாளில் திருச்சியில் மனுதர்ம வேத- ஆகம எரிப்பு போராட்டம் மக்கள் அதிகாரம் அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் போலீசார் நீதிமன்ற தடையை காட்டி ஆர்ப்பாட்டம், மற்றும் எரிப்பு என எந்த போராட்டமும் செய்ய கூடாது என தடை உத்தரவு பிறப்பித்தது. தடையை மீறி மக்கள் அதிகாரம் மற்றும் பிற ஜனநாயக அமைப்புகள் மத்திய பேருந்து நிலையம் அருகில் ஒன்று கூடி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார், வள்ளுவர், வள்ளலார் உள்ளிட்ட சமூக போராளிகளின் படங்கள் முழக்க தட்டிகளுடன் மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜு போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். பிறகு போலீசார் பொரியார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்பவர்கள் தீவிர பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுவீர்கள் என தெரிவித்தனர். மனித சுயமரியாதைக்காக தான் பெரியார் வாழ் நாள் முழுவதும் போராடினார்.

அவர் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்ய செல்பவர்களை சோதனை செய்து தான் பெரியாருக்கு மாலை போட வேண்டும் . முழக்கமிடவோ, முழக்க தட்டிகளை எடுத்து கொண்டு 5 பேருக்குமேல் செல்லவோ கூடாது என்று போலீஸ் சொல்கிறது அதனை ஏற்க முடியாது. பெரியாரைப் போல போராடி நாங்கள் கைதாகிறோம். என முழக்கமிட்டு அதிகாரத்தினர் மற்றும் பிற அமைப்புகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *