திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் காமராஜர் மன்றம் ஏ.எஸ்.டி லூர்துசாமி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் பேசுகையில்:- தங்களின் பகுதியில் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரியும், தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகளை அமைத்து தரக்கோரியும், தெரு விளக்குகளை சீரமைத்து தர கோரியும், பல வார்டுகளில் தூய்மைப் பணியாளர்கள் குறைவாக உள்ளனர் எனவே அதிகப்படியான தூய்மை பணியாளர்களை பணி அமர்ந்த கோரியும், பல வார்டுகளின் சாலைகளிலும் தெருக்களிலும் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மேயர் அன்பழகன் பாதாள சாக்கடை பணிகளை விரைவுபடுத்த எல் அண்ட் டி நிறுவனத்துக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஏற்கனவே பணிகள் தொய்வாக நடக்கின்ற காரணத்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ .15 கோடி பின் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பாதாளச் சாக்கடை மூன்றாவது கட்டப் பணிகளை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க அந்த நிறுவனத்துக்கு கூறியிருக்கிறோம். உடனடியாக காண்டிராக்ட் கேன்சல் செய்தால் ஒதுக்கப்பட்ட நிதி வீணாகிவிடும் மேலும் திருச்சி மாநகராட்சிக்கு கூடிய விரைவில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நியமனம் செய்யப்படுவர் என