தீபாவளி பண்டிகை முடிந்து மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சியை பொது மக்கள் வாங்காமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதன் ஒருபகுதியாக திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மீன் நாட்டுக்கோழி, வான்கோழி, முயல் , இவற்றின் இறைச்சியை வாங்க மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். மேலும் விலையும் கனிசமாக உயர்ந்து காணப்பட்டது இதனால் திருச்சி மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகள் களைகட்டியது..