திருச்சி கலெக்டர் சிவராசு இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி,5 நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகளில் மொத்தம் 1262 வாக்கு சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் பதட்டமான வாக்கு சாவடிகள் என்று கண்டறியப்பட்டது 157 – இங்கு நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.அனைத்து வாகுச்சாவடிகளுக்கும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 1518 – இ.வி.எம் கருவிகள் திருச்சி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. கண்காணிக்க 20 தேர்தல் உள்ளூர் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிரச்சரத்தில் இறுச்சக்கர வாகனம் அனுமதி கிடையாது – நகராட்சி தேர்தலில் மொத்தம் 10,58,674 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினால் வேட்பாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் திருச்சியில் டெல்டா வகை வைரஸ் இன்னும் உள்ளது – டெல்டா வகை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஐ.சி.யூ செல்வோர்கள் எண்ணிக்கை திருச்சியில் உள்ளது – பாதுகப்பாக மக்கள் இருக்கு வேண்டும்.