நாடு முழுவதும் வரும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையில் புத்தாடைகள் உடுத்தி முக்கிய நிகழ்வாக பட்டாசு வெடித்து மகிழ்வர். தமிழக அரசு வெடி வெடிப்பதற்காக காலை 6 மணி முதல் 7:00 மணி வரையிலும் அதே போல் மாலை ஏழு மணி முதல் 8 மணி வரையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடித்து கொண்டாடும்போது தீ விபத்துக்கள் மற்றும் தீக்காயங்கள் ஏற்படுகிறது. இதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் தீக்காயம் ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி செய்வது என்பது குறித்த ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் திருச்சி தீயணைப்பு துறையினர் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் அம்பிகா, ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரதீபா மற்றும் டாக்டர் நெல்சன் ஜேசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.